போட்றா வெடியா..பிக்பாஸ் அல்டிமேட் லேட்டஸ்ட் அப்டேட்
குக் வித் கோமாளி 3, புதிய சீரியல்கள் என அடுத்தடுத்து பல அறிவிப்புக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.
அதோடு கூடுதல் அசத்தலாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியையும் விரைவில் துவக்க போவதாக அறிவித்துள்ளார்கள்.
பிக்பாஸின் கடந்த 5 சீசன்களிலும் பங்கேற்ற வெற்றியாளர்கள் தவிர மற்ற போட்டியாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார்.
வழக்கம் போல் வார இறுதி நாட்களில் வந்து, அந்த பஞ்சாயத்துக்கள் பற்றி பேசி, ஒவ்வொருவராக நாமினேட் செய்து வெளியேற்ற உள்ளார்.
ஆரம்பத்தில் 42 நாட்கள் என சொல்லப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 12 அல்லது 13 என சொல்லி விட்டு, தற்போது 16 ஆக உயர்த்தி உள்ளனர்.
இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதால், 24 மணி நேரமும் அடிதடி சண்டைக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதியாகி விட்டது.
இதை சமீபத்தில் வெளியிடப்பட்ட பிக்பாஸ் அல்டிமேடிற்கான ப்ரமோவும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கா போட்டியாளர்களுடன் கூடிய ப்ரோமோவிற்கான ஷுட்டிங் நேற்று நடத்தப்பட்டுள்ளதாம்.
இதில் கலந்து கொண்டவர்களின் அடிப்படையில் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்க மாட்டேன் என பாவனி ஏற்கனவே கூறி விட்டார்.
ஓவியா பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், பிறகு அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு தகவலாக ப்ரோமோ ஷுட்டிங்கில் ஓவியா கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இறுதியான போட்டியாளர்கள் பட்டியலின் படி, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, சுஜாவருணி, அபினய் வட்டி, தாமரை செல்வி ஆகியோர் பங்கேற்க உள்ளார்களாம்.
சிபி பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகி உள்ளாராம். ஏற்கனவே சொல்லப்பட்டதை போல் வனிதா விஜயக்குமார், ஜுலி, தாடி பாலாஜி, யாஷிகா ஆனந்த் போன்றவர்கள் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வரும் ஜனவரி 30ம் தேதி துவங்கி ஒளிபரப்பாக உள்ளதாம். வரும் வாரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று எடுக்கப்பட்ட ப்ரோமோவும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ மற்றும் போட்டியாளர்கள் பட்டியல் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.