பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதோ வெளியான தகவல்

contestants salary thamarai big-boss-ultimate பிக்பாஸ்அல்டிமேட் தாமரை சம்பளம் வெளியானதகவல்
By Nandhini Apr 16, 2022 01:11 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான்.

நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு, திரும்பவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது.

பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானார். தாமரை 3ம் இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார் தாமரை. அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தாமரை செல்வி பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக தாமரை செல்விக்கு வாரத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் 70 நாட்கள் வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதோ வெளியான தகவல் | Big Boss Ultimate Contestants Thamarai Salary