‘என் புள்ளங்க மேல சத்தியமா... நான் நடிக்கலைங்க’ - கண்ணீர் விட்டு கதறி அழுத தாமரை
சென்ற ஞாயிறு அன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
ஆரம்பம் முதலிலிருந்தே பிக் பாஸ் வீட்டில் தாமரை டார்கெட் செய்யப்படுவது நன்றாகவே தெரிகிறது. வீட்டில் மாங்கு மாங்கென்று வேலை செய்யும் தாமரையை ஏன் தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என்று பாலா முன்பு கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து, இன்று வெளியான ப்ரொமோவில் அதிக ஒட்டு வாங்கிய நபர் தலைவியார் என தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் தாமரைக்கு ‘இது உலகமகா நடிப்புடா’ என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே பொருமிக்கொண்டிருக்கும் தாமரை இதனால் உடைந்து அழுதுள்ளார்.
இந்த அந்த ப்ரொமோ -