‘பிக்பாஸ் 5’ முடிஞ்சும் எனக்கு இன்னும் சம்பளம் தரல்லப்பா...’ - ஓப்பனாக போட்டுடைத்த தாமரை - ஷாக்கான ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரைச் செல்வி. இவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக மீண்டும் களமிறங்கிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமரைச் செல்வி, பைனலுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமேட் ஆகிவிட்டார்.
இந்நிகச்சியிலிருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி கொடுத்துள்ளது. தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக தயாரான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் தாமரை. கடந்த வாரம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தாமரை செல்வியுடன், சக போட்டியாளரான தாடி பாலாஜி பேசுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தால், அதை சம்பளத்தில் பிடித்து விடுவார்கள் எனக் கூறினார்.
இதைக்கேட்டு ஷாக் ஆன தாமரை, எனக்கு தான் இன்னும் சம்பளமே தரலயே என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடிந்து 2 வாரத்துக்கு மேல் ஆகியும் சம்பளம் தராதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்காக தாமரைச் செல்விக்கு ஒரு வாரத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியானது. அவர் 14 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அவருக்கு இதே தொகை தான் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.