பிக்பாஸ் வீட்டிற்கு அதிரடியாக வந்த சாண்டி - போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சமே இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
ஆனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒரே சண்டைதான். இதனால் கடுப்பான ரசிகர்கள் என்னடா இது.. இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தாலே ஒரே சண்டையாவே இருக்கிறது என்று கமெண்ட் செய்து வந்தனர்.
இதனால், இந்நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தவும், கலகலப்பாகவும் பிக்பாஸ் அல்டிமேட் குழு முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து, நேற்று ‘கலக்கப்போவது யாரு’ தீனாவை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று சாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். சாண்டி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும், சந்தோஷத்தில் குதூகலத்து விட்டனர்.
நடிகர் சிம்பு தொகுப்பாளராக வந்துள்ள நிலையில், சாண்டியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 25, 2022
▶ 2 pm Onwards..#Day54 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/uPNdXMO7cC
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan