வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம் யார்ன்னு தெரியுமா? இனி பிக்பாஸ் அல்டிமேட்டே களைகட்டும்

contestants oviya big boss ultimate
By Nandhini Feb 03, 2022 07:32 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த பேவரைட் போட்டியாளர் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நடுவே சில போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது வழக்கம். தற்போது, 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த பேவரைட் போட்டியாளர் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். அவர் வேறுயாரும் கிடையாது. ஓவியா தான்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நடிகை ஓவியா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால், அவரால் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த அவர், பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல ரெடி ஆகி உள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு, அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம் யார்ன்னு தெரியுமா? இனி பிக்பாஸ் அல்டிமேட்டே களைகட்டும் | Big Boss Ultimate Contestants Oviya

வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிரபலம் யார்ன்னு தெரியுமா? இனி பிக்பாஸ் அல்டிமேட்டே களைகட்டும் | Big Boss Ultimate Contestants Oviya