நிரூப்பும் அபிராமியும் முன்னாள் காதலர்களா? தீயாய் பரவும் புகைப்படம்

contestants big-boss ultimate nirup-abirami
By Nandhini Feb 01, 2022 04:33 AM GMT
Report

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30ம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டியாளர்களில் அபிராமி மற்றும் நிரூப் இருவரும் முன்னாள் காதலர்களாவர். இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட பின்பு தான் நிரூப் – யாஷிகா காதலித்து வந்துள்ளனர்.

தற்போது நிரூப், அபிராமி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ வெளியானதைப் பார்த்த நெட்டிசன்கள் அபிராமியை திட்டித் தீர்த்து வருகிறார்கள். மேலும், இந்த சீசனில் உள்ள வந்த முதல் நாளே அபிராமி மற்றும் நிரூப்ஐ பார்த்து இந்த வீட்டில் யாரும் காதல் செய்ய கூடாது என்று நடிகை வனிதா ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது. 

நிரூப்பும் அபிராமியும் முன்னாள் காதலர்களா? தீயாய் பரவும் புகைப்படம் | Big Boss Ultimate Contestants Nirup Abirami

நிரூப்பும் அபிராமியும் முன்னாள் காதலர்களா? தீயாய் பரவும் புகைப்படம் | Big Boss Ultimate Contestants Nirup Abirami