ஜூலி, வனிதாவுக்கே இப்படி ஷாக் ஆகலாமா? இதோ பாருங்க பிக்பாஸ் அல்டிமேட் contestants லிஸ்ட்

OTT prime Big Boss Ultimate contestants list hot star
By Nandhini Jan 19, 2022 07:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தற்போது புதிய பரிணாமத்தில் மக்களை மகிழ்விக்க வருகின்றது.

ஓடிடி தளத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட இருக்கிறது. பிரத்யேகமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியின் புரோமோ நேற்று வெளியானது. இதில் முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறார்கள். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, பரணி, ஜூலி, சினேகன் ஆகியோரும், இரண்டாவது சீசனில் இருந்து ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோரும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோரும், நான்காவது சீசனில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும், 5-வது சீசனில் இருந்து சுருதி, நதியா சங் மற்றும் இசைவாணி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே மல்லுக்கட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30-ம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.