‘உன்னை பிடிக்காது’ என்று ஜூலியை ஓரங்கட்டும் சக போட்டியாளர்கள் - மனம் உடைந்து அழுத ஜூலி

contestants julie crying hot star big-boss ultimate 24 hour live show
By Nandhini Feb 07, 2022 10:12 AM GMT
Report

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் ஊம் சொல்றீயா? ஊஹும் சொல்றீயா? என்ற தலைப்பில் டாஸ்க் கொடுத்துள்ளார்.

இந்த டாஸ்க்கில் பிடிக்காத ஒரு நபரின் போட்டோவுக்கு அருகில் போட்டியாளர்களின் முகம் பதிக்கப்பட்ட பிளாக்கை வைக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத போட்டியாளர்களை கூறி ஏன் பிடிக்கும் ஏன் பிடிக்காது என விளக்கம் கொடுக்கிறார்கள். அப்போது அனிதா, அபிராமி, வனிதா, சுஜா வருணி ஆகியோர் ஜூலியை பிடிக்காது என்று கூறி பிளாக்கை கொடுக்கிறார்கள்.

இந்த டாஸ்க்கில் அதிகமாக ஜூலிதான் நெகட்டிவ் ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதனால் அவர் உடைந்து நொறுங்குகிறார். அப்போது தாமரை செல்விதான் ஜூலியை அணைத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இதோ அந்த ப்ரொமோ -