பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய வனிதா - நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களிலும் கலந்து கொண்டவர்களிலிருந்து இந்த ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களாகக் கலந்து கொண்டார்கள். ஆரம்பித்த நாள் முதலிலிருந்து போட்டியாளர்களிடையே சண்டையும், சச்சரவுக்கிற்கு அளவே கிடையாது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், ஓடிடியிலும் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தற்காலிகமாக விலகி உள்ளார்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது.
அந்த ப்ரொமோவில், வனிதா பிக்பாஸ் கதவை திறங்க... பிக்பாஸ் கதவை திறங்க... என்று கத்தி கூச்சல் போடுகிறார். சக போட்டியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தியும்... உச்சகட்ட கோபத்தில் பிக்பாஸிடம் அவர் வாக்குவாதம் செய்து கதவை திறக்க சொல்கிறார்... ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வனிதாவை ரூமிற்கு அழைத்து பேசுகிறார்... அப்போது வனிதா என் உடல் நிலைக் கருதி நான் வெளியே செல்ல விரும்புகிறேன் என்று கூறுகிறார். அப்போது ஒரு பெண் உள்ளே வந்து வனிதாவை அழைத்துச் செல்கிறார்...
இதோ அந்த பரபரப்பு ப்ரொமோ -