ஜூலியை பார்த்து அந்த கெட்ட வார்த்தை சொன்ன நிரூப் - கொதித்தெழுந்து வீட்டையே இரண்டாக்கிய ஜூலி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்கள் இடையே சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இந்நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
24 மணி நேரமும் நேரடியாக இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்படுவதால், போட்டியாளர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசுவது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் அனிதா சம்பத் நிரூப்பை பார்த்து கெட்ட வார்த்தை பேசினார். அது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரொமோவில், ஜூலியைப் பார்த்து நிரூப் 2 முறை கெட்ட வார்த்தையால் பேசினார்.
இதனால், கொதித்தெழுந்த ஜூலி, என்னடா சொன்னா.. என்னடா சொன்னா.. யாரப்பார்த்து என்னடா சொல்ற... என்று கத்தி கூச்சலிட்டு நிரூப்பிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார்.
இந்தப் ப்ரொமோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஜூலிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஜூலி நீங்க கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்.. சிம்பு சார்... இந்த வாரம் வந்து கெட்டவார்த்தை பேசுபவர்களை நிச்சயம் கண்டியுங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த பரபரப்பான ப்ரொமோ -