திடீரென்று பிக்பாஸ் வீட்டில் அதிரடியாய் பேசிய தீனா... - துள்ளி குதித்த பாலா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க் கொடுத்து வருகிறார்.
தற்போது, இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில், அபியும், பாலாவும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று தீனா குரல் ஒலிக்கிறது.
யாரும் கேட்டகமாட்டாங்க என்பதற்காக எவ்வளவு நேரம் கேம் விளையாடுவீங்கன்னு மைக்கில் பேசுகிறார். அதற்கு அபிராமி நீ எப்படா வந்த... என்று கேட்க, அதற்கு பாலா, தினா நீயும் வா... ஒருத்தர் KPY லிருந்து வந்து இங்கு திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்.
இந்தப் ப்ரொவைப் பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை தீனா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 24, 2022
▶ 9 pm Onwards..#Day53 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/l6Ist6K5Yy