பிக்பாஸ் கொடுத்த கார் டாஸ்க் - சுருதியை வெளுத்துக் கட்டிய பாலா - பரபரப்பு ப்ரொமோ

big-boss ultimate contestants-fight சண்டை பிக்பாஸ் அல்டிமேட் ஜூலி பாலா டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சுருதி
By Nandhini Mar 22, 2022 11:47 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அடுத்தடுத்து டாஸ்க் கொடுப்பார். நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க கடினமாக டாஸ்க்குகள் கொடுத்து போட்டியாளர்களிடையே கலவரத்தையும், சண்டையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான கார் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

இந்த கார் டாஸ்க்கில் சுருதிக்கும், பாலாவிற்கும் சண்டை முட்டிக்கொள்கிறது. ஓட்டு போட்ட நான் முட்டாள்... ஓட்டு போடாத நீங்க புத்திசாலியா என்று சராமரியாக பாலா கேள்வியை கேட்டு தாக்குகிறார்.