பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் - அடுத்தடுத்து மயங்கி விழுந்த போட்டியாளர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க், நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க கடினமாக டாஸ்க்குகள் கொடுத்து போட்டியாளர்களிடையே கலவரத்தையும், சண்டையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
அதில், போட்டியாளர்கள் அட்டைகளை அடுக்க அதை மற்றோரு போட்டியாளர் கலைக்க வேண்டும் என்று சொல்லப்டுகிறது. கொளுத்தும் வெயிலில் இந்த டாஸ்க் நடந்தது.
விறுவிறுப்பாக இப்போட்டி சென்றுகொண்டிருந்த போட்டிக்கிடையே போட்டியாளர்கள் மிகவும் சோர்வாகிவிட்டனர். இதனையடுத்து, உச்சி வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மயங்கியுள்ளனர்.
முதலில் ஜூலி மயங்கி விழ, அடுத்து சுருதி, தாமரை செல்வி வெயிலில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பாலா அவரை தூங்கிக் கொண்டு ஓடி நிழலான இடத்தில் வைக்கிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னதான் ரியலாட்டியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.