பிக்பாஸ் கொடுத்த முட்டை டாஸ்க் - பாலாவின் கழுத்து பெல்ட்டை இழுத்து கத்திய அனிதா - பரபரப்பு ப்ரொமோ

big-boss-ultimate contestants-fight சண்டை பிக்பாஸ் அல்டிமேட் பாலா disney+hotstar அனிதா
By Nandhini Mar 18, 2022 06:31 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் முட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை டாஸ்க்கில் போட்டியார்கள் மத்தியில் கடும் சண்டை வெடித்து வருகிறது. 

தற்போது இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், பிக்பாஸ் வீட்டில் கோழி கூவுனவுடன், முட்டை எடுக்க முயன்ற அனிதாவை, பாலா அவரிடமிருந்து முட்டையை கைப்பற்றுகிறார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த அனிதா, பாலாவின் பெல்டை இழுத்து நான் எடுத்துட்டேன்.. நான் எடுத்துட்டேன் என்று கத்தி கூச்சலிடுகிறார்கள். இதனால், பாலாவிற்கும், அனிதாவிற்கும் இடையே ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கிறது. 

தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.