கொளுத்திப்போடுவாங்களாம்.. நமுத்துப்போச்சுன்னா... டென்ஷனாவாங்களாம்... - வனிதாவிடம் அல்டிமேட் செய்த பாலாஜி

balaji vanitha big-boss-ultimate contestants-fight வனிதா பாலாஜி
By Nandhini Feb 18, 2022 08:23 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாஸ்ஸ்டாலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களிடையே சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. 

வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே கத்திக்கொண்டும், போட்டியாளர்களிடம் சண்டை போட்டுக்கொண்டும்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், பாலாஜியோ வனிதா கேட்டும் சராமரி கேள்விக்கு கூலா பதில் சொல்லிக்கொண்டு தன்னுடைய கேமை சிறப்பா விளையாடிக்கொண்டு வருகிறார். 

பாலாஜி கலந்து கொண்ட கடந்த சீசனை விட, இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாவிற்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். குறும்புத்தனமாக தன்னுடைய கேமை அவர் விளையாடி வருவதால் ரசிகர்கள் பாலாஜியை கொண்டாடி வருகின்றனர். 

இன்றைக்கான ப்ரொமோவில், வனிதா போடும் சண்டையில், இவங்களே கொளுத்திப்போடுவாங்களாம்.. நமுத்துப்போச்சுன்னா... டென்ஷனாவாங்களாம்... என்று கூறியதால்.. சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள், பாலாஜி நீ வேற லெவல்... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.