வாம்மா.. வா... உன்னத்தான் எதிர்பார்த்தோம்... - வனிதாவை கிழித்து தொங்கவிட்ட தாமரை - பரபரப்பு ப்ரொமோ
டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2ம் வாரத்தில் சுஜாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரொமோவில், பிக்பாஸ் யார் சிறப்பாக செயல்படலையோ அவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்.
வீட்டில் உள்ளவர்கள் தாமரை, நிரூப், ஸ்ருதி என்று தேர்வு செய்கிறார்கள். உடனே, வீட்டின் கேப்டனான வனிதா எழுந்து மூன்று பேரையும் சிறையில் அடைக்க சொல்கிறார். உடனே தாமரை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டில் சராமரியாக கேள்விக்குப் பின் கேள்வியை எழுப்பி தோரணம்கட்டியுள்ளார்.
வாம்மா.. வா.. இவ்ளோ நாளா உன்னத்தான் எதிர்பார்த்தோம்.. வனிதா Vs தாமரை வேறலெவல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த பரபரப்பு ப்ரொமோ -