பிக்பாஸ் அல்டிமேட் - வனிதாவுக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் வெடித்தது சண்டை - அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்

vanitha big-boss ultimate contestants fight
By Nandhini Feb 02, 2022 09:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது. இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றைக்கான 2-வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில், சுரேஷ் சக்ரவர்த்திக்கும், வனிதாவிற்கும் இடையில் பயங்கரமாக சண்டை முட்டிக் கொண்டது. 

பொம்பளைக்கு அடக்கம் வேண்டும் என்று சுரேஷ் சக்ரவர்த்தி சொல்ல, வனிதா என்ன அடக்கம் வேண்டும் என்று இருவரும் சண்டையில் வாக்குவாதம் செய்கிறார்கள். இதைக் கண்ட சினேகன் அந்த இடத்திலிருந்து வெளியேறி செல்கிறார். 

இதோ அந்த ப்ரொமோ -