பிக்பாஸ் தாமரையை சந்தித்த இன்னொரு பிரபலம் - வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான்.
நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.
இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு, திரும்பவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானார். தாமரை 3ம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தாமரையை வீடு தேடிச் சென்று சந்தித்தார் அனிதா. இதனையடுத்து, தாமரையை பாலா சந்தித்துப் பேசியுள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மிக மிக மகிழ்ச்சி !!!! @OfficialBalaji இருக்கும்
— Thamarai selvi (@Thamarai_offici) May 5, 2022
அன்பு எப்பவும் மாறாது #Thamarai #ThamaraiSelvi #BalajiMurugadoss? pic.twitter.com/hUDGyKLnFG