பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது.இதில் இதற்கு முந்தைய சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சுரேஷ்,சக்கரவர்த்தி,சுஜா வருணி,ஷாரிக்,அபினய் உள்ளிட்ட 4 பேர் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் 5 வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி உள்ள நிலையில் வார இறுதியில் ஒரு நாள் மட்டுமே சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
5 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட் நிகழச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவர் நாளொன்றுக்கு தலா ஒரு கோடி ரூபாய் என 5 நாட்களுக்கு 5 கோடிகள் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
You May Like This