கெத்தா... மாஸா... பிக்பாஸ் அல்டிமெட்டில் வந்து நின்ற சிம்பு - வெற லெவல் ப்ரொமோ

big-boss-ultimate actor-simbu பிக்பாஸ் அல்டிமேட் நடிகர் சிம்பு கமல் விலகல் viral-promo ப்ரொமோ வெளியீடு
By Nandhini Feb 24, 2022 10:05 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி சண்டைக்கும், சச்சரவிற்கும் குறைவே இல்லை. 

14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, தொடங்கிய முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2-வது வாரத்தில் சுஜாவும், 3ம் வாரத்தில் அபினஸ் மற்றும் ஷாரிக்கும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள். 

ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம், வனிதா சில காரணங்கள் அதிரடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறி சென்று விட்டார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக தற்காலிகமாக விலகியுள்ளார்.

நடிகர்  கமல் விலகியதால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி யார் தொடர்ந்து நடத்துவார்கள் என்று ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. 

அந்த ப்ரொமோவில் நடிகர் சிம்பு, கெத்தா... மாஸா... வந்து நிற்கிறார். இனி இவர்தான் தொகுத்து வழங்கப்போகிறார் என்று அவரே அந்த ப்ரொமோவில் வெளிப்படுத்தியுள்ளார். 

இதோ அந்த ப்ரொமோ -