இனி ‘பிக்பாஸ் அல்டிமேட்’டை தொகுத்து வழங்கப்போவது இவரா? - வைரலாகும் புகைப்படம்

viral-photo big-boss-ultimate actor-simbu fans-happy பிக்பாஸ் அல்டிமேட் வைரல் புகைப்படம் நடிகர் சிம்பு கமல் விலகல்
By Nandhini Feb 23, 2022 08:47 AM GMT
Report

பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்து, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கிடையே தினமும் சண்டை போட்டுக்கொண்டு முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள்.

முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், இரண்டாம் வாரத்தில் சுஜாவும், சென்ற வாரத்தில் அபினய் மற்றும் ஷாரிக்கும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு சில காரணங்களுக்காக வெளியேறி இருக்கிறார். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல் திடீரென விலகியுள்ளதால் அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மத்தியில், முதலில் ரம்யாகிருஷ்ணன் பெயர் அடிப்பட்டது.

ஆனால், தற்போது நடிகர் சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டில் நடிகர் சிம்பு கலந்து கொண்டிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் - 

இனி ‘பிக்பாஸ் அல்டிமேட்’டை தொகுத்து வழங்கப்போவது இவரா? - வைரலாகும் புகைப்படம் | Big Boss Ultimate Actor Simbu Viral Photo