நம்ம ஆடுனா... தமிழ்நாட்டிற்கே பார்ட்டித்தான்.... களைக்கட்டும் பிக்பாஸ் அல்டிமேட் Grand Finale

big-boss-ultimate பிக்பாஸ்அல்டிமேட் actor-Simbu Grand-finale GrandFinale
By Nandhini Apr 10, 2022 07:47 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாமரை, நிரூப், அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் சண்டைக்கும், சச்சரவிற்கும் குறைவே இல்லாமல் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக தற்காலிகமாக விலகினார்.

நடிகர் கமல் விலகியதால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி யார் தொடர்ந்து நடத்துவார்கள் என்று ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்நிலையில், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரொமோவில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி களைக்கட்டியுள்ளது. நிரூப், பாலா, தாமரை, ரம்யா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் டான்ஸ் ஆட, போட்டியாளர்களும் மேடையில் டான்ஸ் ஆடுவதுபோல் வெளியாகி உள்ளது.