இந்த வாரம்... சிம்பு வெளியே அனுப்பும் போட்டியாளர்கள் இவர்கள்தான் - வெளியான தகவல்
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாலில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கமல் தன்னுடைய சொந்த காரணத்திற்காக நிகழ்ச்சியை விட்டு விலகியுள்ளார். இதனையடுத்து, கடந்த வாரம் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
சிம்பு பிக்பாஸ்சிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் சென்ற வாரம் போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை.
கடந்த வாரம் எலிமினேட் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி வைல்டு கார்டு என்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளார். மேலும், விஜய் டிவியின் கேபிஒய் பிரபலம் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜூலி, சினேகன், அனிதா, தாடி பாலாஜி, சுருதி, அபிராமி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் சுருதி, சினேகன், தாடி பாலாஜி ஆகிய 3 பேரும் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டில் இவர்கள் 3 பேரும், கடைசி 3 இடத்தை பிடித்துள்ளனர்.
அதனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் சிம்பு வெளியேற்றும் முதல் நபராக சுருதி மற்றும் சினேகன் இருவரில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் கடைசி நேரம் ஓட்டிங் லிஸ்டில் மாற்றம் ஏற்பட்டு, நாளை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதையும், யார் வெளியேற போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.