எப்போது பிக் பாஸ் 5? - வெளியான 2வது ப்ரோமோவால் ரசிகர்கள் உற்சாகம்

viral bigg boss 5 2nd promo
By Anupriyamkumaresan Sep 12, 2021 03:13 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போது பிக் பாஸ் 5? - வெளியான 2வது ப்ரோமோவால் ரசிகர்கள் உற்சாகம் | Big Boss Season 5 2Nd Promo Released Viral

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, முதல் ப்ரோமோ வெளியான நிலையில், இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

”ஒரே களேபரம்தான் போங்க, நான் சமையல சொன்னேன்” என கமல் இந்த ப்ரோமோவில் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக ஆரம்பித்துள்ளது. விரைவில் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.