ஏமாற்றிய ரக்ஷிதா... - மனம் உடைந்து அழுத ராபர்ட் மாஸ்டர் - நடந்தது என்ன?

Viral Video Bigg Boss
By Nandhini Nov 18, 2022 08:32 AM GMT
Report

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

big-boss-robert-master-rakshita-viral-video

கண்கலங்கி அழுத ராபர்ட் மாஸ்டர்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும், ஜனனி இளவரசியாகவும் பிக்பாஸ் வீட்டை வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ரக்ஷிதாவின் கையைப் பிடித்து ராபர்ட் மாஸ்டர் வில் வித்தை கற்று கொடுப்பதும், தன் உணவில் உப்பு இல்லை என்று ரக்ஷிதா சொன்னதும் அப்படியே கொந்தளித்து எழுந்து வசனம் பேசுவதும், கன்னத்தில் தட்டி நடனமாடுவதும் மாஸ் காட்டினார் ராபர்ட் மாஸ்டர். ராபர்ட் மாஸ்டரின் இந்த செயலைப் பார்த்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

தற்போது இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது.

அந்த ப்ரொமோவில் ரக்ஷிதாவால் ராபர்ட் மாஸ்டர் ஏமாற்றப்பட்டிருப்பார் போல, வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி மனம் உடைந்து அழுகிறார்.

அப்போது, சக போட்டியாளர்கள் இது ஒரு விளையாட்டு, இதற்கு ஏன் அழுகிறீர்கள் என்று அவரை தேற்றுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.