ரக்ஷிதாவின் கையை இழுத்து, கன்னத்தில் தட்டி நடனமாடிய ராபர்ட் மாஸ்டர் - பிக்பாஸில் என்ன நடக்கிறது..?

Viral Video Bigg Boss
By Nandhini Nov 17, 2022 01:06 PM GMT
Report

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வில் வித்தை கற்றுக்கொடுத்த ராபர்ட் மாஸ்டர்

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும், ஜனனி இளவரசியாகவும் பிக்பாஸ் வீட்டை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று வெளியான ப்ரொமோவில் ரக்ஷிதாவின் கையைப் பிடித்து ராபர்ட் மாஸ்டர் பாகுபலியாக மாறி வில் வித்தை சொல்லி கொடுப்பதும். தன் உணவில் உப்பு இல்லை என்று ரக்ஷிதா சொன்னதும் அப்படியே கொந்தளித்து எழுந்து வசனம் பேசினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், நெட்டிசன்கள் இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலக்குமாரா... என்று பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

big boss

ரக்ஷிதானின் கையை இழுத்து நடனமாடிய ராபர்ட் மாஸ்டர்

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் ராஜாவாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், ராணியாக இருக்கும் ரக்ஷிதாவின் கையைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் தட்டி நடனமாடியுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடேய்... ரக்ஷிதா அடுத்தவன் மனைவி... இவர் பண்ற அட்ராசிட்டி தாங்க முடியலைய்யே... இத பார்க்கும்போது ரக்ஷிதா கணவர் தினேஷ் வயிறு எரியப்போகுது... இந்தாளு ஒரு முடிவோடு தான் உள்ள போயிருக்கார் ரச்சிதாக்கு விவாகரத்து வங்கி தராம விடமாட்டார் போல...என்று பங்கமாய் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.