ராபர்ட்டை வச்சு விளாசிய ரக்ஷிதா - கணவர் தினேஷ் என்ன சொன்னார்ன்னு தெரியுமா?

Bigg Boss
By Nandhini 1 வாரம் முன்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வில் வித்தை கற்றுக்கொடுத்த ராபர்ட் மாஸ்டர்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும், ஜனனி இளவரசியாகவும் பிக்பாஸ் வீட்டை வலம் வந்தனர்.

அப்போது, ரக்ஷிதாவின் கையைப் பிடித்து ராபர்ட் மாஸ்டர் பாகுபலியாக மாறி வில் வித்தை சொல்லி கொடுப்பதும். தன் உணவில் உப்பு இல்லை என்று ரக்ஷிதா சொன்னதும் அப்படியே கொந்தளித்து எழுந்து வசனம் பேசுவதும், கன்னத்தை தட்டி நடனம் ஆடுவதும் வேடிக்கையாக இருந்தது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்க்க ஆரம்பித்தனர். இதனையடுத்து, ராஜகுடும்ப டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் பர்ஃபாம் சரியாக செய்யவில்லை என்று இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பினர் சகபோட்டியாளர்கள்.

ஜெயிலுக்குள் ராபர்ட், போர்வையை மூடிக்கொண்டு அழுத ரச்சிதாவை என் தங்கமே, பட்டு என்று கொஞ்சினார். மேலும் ரச்சிதாவை தொட்டு கிள்ளி முத்தமும் கொடுத்தார்.

நேருக்கு நேராக வெச்சு விளாசிய செய்த ரக்ஷிதா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடந்தது. அப்போது, போட்டியாளர்கள் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு அமர்ந்து நேருக்கு நேராக நாமினேஷன் செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவாறு ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார் ரக்ஷிதா.

ராபர்ட் விளையாடும் மன நிலையில் இல்லை என்ற அவர் இந்த வாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற வேண்டும் என்று தடாலடியாக கூறினார்.

இதைக் கேட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் முகம் வாடிவிட்டது. ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ததை பார்த்த ரசிகர்கள்... செம்ம... சூப்பர்மா என அவரை கொண்டாடி வருகிறார்கள்.

big-boss-robert-master-rakshita-dinesh

கணவர் தினேஷ்

ரக்ஷிதா ராபர்ட்டை நாமினேட் செய்ததால், ரசிகர்கள் மட்டுமல்ல.. கணவர் தினேஷும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். ராபர்ட் விவகாரத்தில் ரச்சிதாவை தவறாக பேச வேண்டாம் என்றும், அவர் மனதை காயப்படுத்த வேண்டாம் என்றும் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வேண்டாம் என்று தான் ரச்சிதா அமைதியாக இருந்து வருகிறார் என்று தினேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.