Friday, Apr 4, 2025

ராபர்ட் மாஸ்டருக்கு முடிவு கட்ட... - பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் ரக்ஷிதா கணவர் தினேஷ்...? தீயாய் பரவும் தகவல்

Bigg Boss
By Nandhini 2 years ago
Report

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடும் கோபத்தில் தினேஷ்

ரக்ஷிதாவும் அவருடைய கணவர் தினேஷ் இருவரும் பிரிந்து இருந்தாலும் சட்டப்படி அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யவில்லை.

மேலும், ரக்ஷிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போது, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் தினேஷ். ராபர்ட் மாஸ்டரின் ஒரு சில செயல்களால் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் வரவழைத்துள்ளது.

big-boss-robert-master-rakshita-dinesh

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ள தினேஷ்?

இந்நிலையில், நடிகை ரச்சிதாவின் கணவர் நடிகர் தினேஷ், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரக்ஷிதா கணவர் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளாரா அல்லது உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் டாஸ்க்கில் செல்வாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.