’’சார், பேசாமல் ஆண்டவர அனுப்புங்க’’ - ரம்யா கிருஷ்ணனை சாடும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் சிபி விவகாரத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை தொடர்ந்து கடந்த வாரம் இசைவாணியும் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ரம்யா கிருஷ்ணன் 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருப்பதே இந்தத் தேர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனின் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கிய விதம் எப்படி இருந்தது என்பது நமது நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை சமூகவலைதளங்களில் வாரி வீசியுள்ளனர்.

அதில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன் சிபி விவகாரத்தில் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்றும் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டார் எனவும் கூறியுள்ளார்.

இன்னொருவர் குறும் படத்தை பார்த்த பின்னர் கூட சிபியிடம் ரம்யா கிருஷ்ணன் இவ்வளவு ரூடாக நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும் இந்த இடத்தில் கமல்ஹாசன் இருந்திருந்தால் அவர் சிபியின் பக்கம் நின்றிருப்பார் என்று கூறியுள்ளார்.

ஆகவே ஒட்டு மொத்தமாக  ரம்யா ஓகே வாக இருந்தாலும், கமல்ஹாசனே எங்களின் தேர்வு என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கும் ரம்யா கிருஷ்ணனே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்