பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவிற்கு அடித்த ஜாக்பாட் - ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Cinema
By Swetha Subash May 11, 2022 08:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போதுசம்யுக்தாவுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

அது என்னவென்றால், விஜயின் 66-வது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என்பது தான். படத்தில் சம்யுக்தா இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டரில் நடிகர் ஷாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவிற்கு அடித்த ஜாக்பாட் - ரசிகர்கள் உற்சாகம்! | Big Boss Fame Samyukta Joins Thalapathy 66 Crew

மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, நடிகைகள் ஜெயசுதா, சங்கீதா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது சம்யுக்தா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.