பிக்பாஸிற்குள் வரப்போகும் வைல்டு கார்டு போட்டியாளர் யார்ன்னு தெரியுமா? - இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Kamal Haasan Bigg Boss
By Nandhini 1 மாதம் முன்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்டிவிட்ஜுவல் பர்ஃபாமன்ஸ் டாஸ்க்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வீக்ளி டாஸ்க்காக இன்டிவிட்ஜுவல் பர்ஃபாமன்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டாஸ்க்கில் பெரிய ஸ்டார்...நீங்க ஆகப் போறீங்க மக்களின் ஸ்டார் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான கெட்டப்பில் கெத்தாய் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை சுற்றி வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

யார் அசத்தலான பர்ஃபாமன்ஸையும் காட்டி வருகிறார்களோ, யார் இந்த டாஸ்க்கின் இறுதியில் அதிக சன்மானம் பெறுகிறார்களோ அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த போட்டியாளர் வரும் வார கேப்டன் டாஸ்க்கிற்கு நேரடியாக தகுதி பெறுவார்.

big-boss-6-vijay-tv-kamal-haasan

வைல்டு கார்டு போட்டியாளர்...?

இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற இருப்பதால், மேலும் ஒரு போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார்.

தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க...