அவமானப்படுத்திய குயின்ஸி... - காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இலங்கைப் பெண் ஜனனி.. - ஷாக்கான ரசிகர்கள்
நேற்று பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் குயின்ஸியின் காலில் திடீரென விழுந்து ஜனனி மன்னிப்புக்கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
குயின்ஸியின் காலில் விழுந்த ஜனனி
இந்நிலையில், நேற்று பிக்பாஸ் வீட்டில் குயின்ஸிக்கும், ஜனனிக்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது குயின்ஸி காலில் ஜனனி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிக்பாஸ் வீட்டில் ஒரு அவசர நேரத்தில் ஜனனி தெரியாமல் குயின்சின் டவலை எடுத்து பயன்படுத்தினார்.
இதைப் பார்த்த குயின்ஸி பயங்கரமாக டென்ஷன் ஆகிவிட்டார். யாரும் என் டவலை எடுத்து பயன்படுத்துவது எனக்கு சுத்தமா பிடிக்காது. என் வீட்டில் என் அப்பா, தம்பி யாராச்சும் என் டவலை எடுத்து பயன்படுத்தினால் எனக்கு கோபம் வரும் என்று கூற, உடனே ஜனனி ஓடி வந்து குயின்ஸியை சமாதானப்படுத்துகிறார்.
உங்களது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் எடுத்து பயன்படுத்திவிட்டேன் கூற, விடாமல் குயின்ஸி கோபப்பட்டுக்கொண்டே இருந்தார். தனலட்சுமியும் சரி விடு குயின்ஸி.. அவ தெரியாமல் பயன்படுத்திவிட்டாள் என்று கூறியும், மீண்டும் குயின்ஸி கோபப்பட்டதால், ஜனனி குயின்ஸியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதன் பிறகு குயின்ஸி பிக்பாஸ் வீட்டில் புலம்பிக்கொண்டிருந்ததால், மனம் கலங்கிய ஜனனி தனிமையில் அவமானத்தால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஜனனி ரசிகர்கள்.. குயின்ஸி ரொம்ப ஓவராத்தான் போய் கொண்டிருக்கிறாள்... பாவம் ஜனனி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.