பிக்பாஸ் வீட்டில் நேரடியாக முகத்திரையை கிழித்த ஜனனி - தேம்பி.. தேம்பி.. அழுத தனலட்சுமி...!
பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியை நேரடியாக முகத்திரையை கிழிக்கும்படி ஜனனி பேசியதால் தனலட்சுமி தேம்பி, தேம்பி அழுத ப்ரொமோ வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
அடுத்த வாரம் நாமினேஷன்
ஆனால், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்களிடையே பொறாமைகள், சண்டைகள் சூடு பிடித்துள்ள புரோமோ அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்த வாரம் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது
நேற்று பிக்பாஸ் போட்டியாளர் தனலட்சுமி, ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது. அவர் நாரதர் வேலை பார்த்து கொண்டு, அனைவரையுமே அந்த வேலையை பார்க்க வைக்கிறார் என்று பேசினார். இதனையடுத்து, போட்டியில் ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ஜி.பி.முத்து கதறி அழுதார்.
தேம்பி, தேம்பி அழுத தனலட்சுமி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ வைரலாகி வருகிறது. அந்த ப்ரொமோவில், ஜி.பி.முத்து எங்களுக்கு அப்பா மாதிரி... அவர் எகிறி கொண்டு வந்து பேசியிருந்தால், நீங்கள் பொறுமையா போய் இருக்கணும்.
இப்படி அவரிடம் நடந்து கொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று தனலட்சுமிக்கு முகத்திற்கு நேராக ஜனனி பேசியதால், தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் தேம்பி, தேம்பி அழுதுள்ளார்.
தற்போது இந்த ப்ரொமோ வைரலாகி வருகிறது. இந்த ப்ரொமோவைப் பார்த்த ஜி.பி.முத்து ரசிகர்கள் தனலட்சுமியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
#Day5 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/piBHFMsDhL
— Vijay Television (@vijaytelevision) October 14, 2022