பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப் போவது யார்ன்னு தெரியுமா? - இவரா... - ஷாக்கான ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப் போகும் ஒரு போட்டியாளரை குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
அடுத்த வாரம் நாமினேஷன்
ஆனால், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்களிடையே பொறாமைகள், சண்டைகள் சூடு பிடித்துள்ள புரோமோ அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்த வாரம் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து சக போட்டியாளர்களிடம் தனது ஆஸ்தான பாஷையை பேச, போட்டியாளர்கள் ஜாலியாக சிரிக்கின்றனர். இதைப் பார்த்த, தனலட்சுமி ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது. அவர் நாரதர் வேலை பார்த்து கொண்டு, அனைவரையுமே அந்த வேலையை பார்க்க வைக்கிறார் என்று பேசுகிறார். இது குறித்த புரோமோ நேற்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இதைப் பார்த்த ஜிபி முத்து ஆர்மியிடம் வசமாக சிக்கியுள்ளார் தனலட்சுமி. எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்லாவிட்டாலும், அடுத்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கிவிடுவார். இவரை தான் முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று ஜி.பி.முத்து ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.