தலைவரே.. தலைவரே.. என ஜிபி முத்துவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஹவுஸ்மேட்ஸ்... - வைரலாகும் ப்ரொமோ...!

Bigg Boss GP Muthu
By Nandhini Oct 17, 2022 09:17 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

பிக்பாஸ் கொடுத்த டஃப் டாஸ்க்

இன்றைக்கான ப்ரொமோ காலையில் வெளியானது. அந்த ப்ரொமோவில், இந்த வாரம் வீட்டின் தலைவர் ஆகப்போவது யார் என்பதை தேர்ந்தெடுக்க கேப்டன்சி டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அதில் சாந்தி, ஜனனி, ஜிபி முத்து ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

கார்டன் ஏரியாவில் நடக்கும் இந்த டாஸ்க்கில் கடிகாரம் போன்று வட்டமாக இருக்கும் ஒரு பலகையில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். சுழலும் அந்த பலகையில் இருந்து விழாமல் இறுதிவரை நிற்பவரே இந்த டாஸ்கில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

இந்த டாஸ்க்கில் சிறிது நேரத்திலேயே சாந்தி கை வலித்ததால் இறங்கிவிடுகிறார். அதன் பிறகு, ஜிபி முத்துவுக்கும் ஜனனிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அதில் நின்று கொண்டிருந்த ப்ரொமோ வெளியானது. 

big-boss-6-vijay-tv-g-p-muthu

தலைவரே.. தலைவரே... 

தற்போது இந்த ப்ரொமோ வைரலாகி வருகிறது. அந்த ப்ரொமோவில், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் ஜி.பி. முத்துவை தலைவரே.... தலைவரே என்று அழைத்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதைப் பார்க்கும்போது, அவர் கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெற்றுவிட்டார் போல தெரிகிறது. அதனால் அவரை கேப்டன் என்று அழைப்பதற்கு பதிலாக தலைவரே என அழைத்து வருகிறார்கள் போல் உள்ளது. தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.