கேப்டனாக ஆசைப்பட்ட ஜிபி முத்து... - கதறவிட்ட பிக்பாஸ் - வைரலாகும் புரொமோ...!

Viral Video Bigg Boss GP Muthu
By Nandhini Oct 17, 2022 07:37 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

கேப்டனாக ஆசைப்பட்ட ஜிபி முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் முடிந்து, தற்போது இரண்டாவது வாரம் தொடங்கியுள்ளது.

தற்போது சமூகவலைத்தளங்களில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில், இந்த வாரம் வீட்டின் தலைவர் ஆகப்போவது யார் என்பதை தேர்ந்தெடுக்க கேப்டன்சி டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் சாந்தி, ஜனனி, ஜிபி முத்து ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். கார்டன் ஏரியாவில் நடக்கும் இந்த டாஸ்க்கில் கடிகாரம் போன்று வட்டமாக இருக்கும் ஒரு பலகையில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். சுழலும் அந்த பலகையில் இருந்து விழாமல் இறுதிவரை நிற்பவரே இந்த டாஸ்கில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

இந்த டாஸ்க்கில் சிறிது நேரத்திலேயே சாந்தி கை வலித்ததால் இறங்கிவிடுகிறார். அதன் பிறகு, ஜிபி முத்துவுக்கும் ஜனனிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அதில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த ப்ரொமோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் வாரமே இவ்ளோ டஃப் ஆன டாஸ்க்கா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

big-boss-6-vijay-tv-g-p-muthu