இணையதளத்தில் வைரலாகும் ஜி.பி.முத்துவின் Rain Dance - தெறிக்க விடும் ரசிகர்கள்...!

Viral Video Bigg Boss GP Muthu
By Nandhini Oct 12, 2022 10:39 AM GMT
Report

இணையதளத்தில் வைரலாகும் ஜி.பி.முத்துவின் Rain Dance படு வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

big-boss-6-vijay-tv-gp-muthu

வைரலாகும் ஜி.பி.முத்துவின் Rain Dance -

இந்நிலையில், இணையதளத்தில் ஜி.பி.முத்துவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் மழையில் நனைந்தவாறு ஜி.பி.முத்து அதில் வளைந்து, நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து, தரையில் உருண்டு, புரண்டு நடனமாடியுள்ளார்.

தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிரித்ததோடு அல்லாமல், எங்கள் மனஅழுத்தத்தை குறைக்க வந்த தலைவா... என்று கொண்டாடி கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ வழக்கம் போல ஜி.பி.முத்துவை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.