கமல் சார் கிட்ட சொல்லி அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பேன்... - பிக்பாஸில் பொங்கிய தனலட்சுமி...!

Viral Video Bigg Boss
By Nandhini Oct 26, 2022 08:46 AM GMT
Report

இன்றைக்கு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி 6 ப்ரொமோவில், கமல் சார் கிட்ட சொல்லி அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பேன் என்று தனலட்சுமி சக போட்டியாளர்களிடம் பேசிய ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கடந்த வாரம் ஜி.பி.முத்து நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார்.

கத்தி கூச்சலிட்ட அசீம் 

இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் தற்போது ‘நானும் பொம்மை... நீயும் பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கான ப்ரொமோவில், இந்த டாஸ்க்கில் தனலட்சுமி சக போட்டியாளர்களான ஷெரினாவையும், நிவாஷினியையும் தள்ளிவிட்டதாக அசீம் பயங்கரமாக குற்றம் சாட்டி திட்டித் தீர்க்கிறார். நீயும் பொண்ணு தான் உனக்கெல்லாம் அறிவில்லையா... என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

big-boss-6-vijay-tv-dhanalaxmi

மன்னிப்பு கேட்க வைப்பேன்

தற்போது அடுத்த ப்ரொமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரொமோவில், தனலட்சுமி சக பெண் போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது தனலட்சுமி பேசுகையில், அசீம் சொல்வது பொய். இதற்காக குறும்படம் போடச் சொல்லி கமல் சாரிடம் கேட்கப்போகிறேன். அப்படி அதில் நான் தவறு செய்திருந்தால், நான் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்பேன். ஆனால், தவறு செய்யவில்லை என்றால் என்னை யாரெல்லாம் குற்றம் சாட்டினார்களோ, அவர்களெல்லாம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார்.

கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக் கொண்ட அசீம். தற்போது தனலட்சுமியுடன் சண்டையிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த ப்ரொமோ இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்புடன் செல்லப்போகிறது