ஸ்டைலா.. கெத்தா... நடந்து வந்து செய்தி வாசித்த இலங்கை பெண் ஜனனி... - வாயடைத்துப்போன ரசிகர்கள்...!
பிக்பாஸ் வீட்டில் ஸ்டைலா.. கெத்தா... நடந்து வந்து செய்தி வாசித்த இலங்கை பெண் ஜனனியின் அழகில் ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
கெத்தா வந்த இலங்கை பெண் ஜனனி
இந்நிலையில், இன்றைக்கான பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த ப்ரொமோவில், இலங்கைப் பெண் ஜனனி கோட் சூட் போட்டுக்கொண்டு, கெத்தா நடந்து வந்து ஸ்டைலா செய்தி வாசித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... என்ன அழகான தமிழில் செய்தி வாசிக்கிறார் என்று வாயடைத்துப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜனனி ரசிகர்களோ... என் தேவதை... என்ன அழகா செய்தி வாசிக்கிறாங்க... என்று லைக்குகளை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.