பிக்பாஸில் அசீம் - மகேஸ்வரி சண்டையால் பற்றி எரிந்த வீடு - அதிர்ச்சியான போட்டியாளர்கள்....!
பிக்பாஸில் அசீம், மகேஸ்வரி சண்டையால் சக போட்டியாளர்கள் ஷாக்கான ப்ரொமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அசீமை திட்டித் தீர்த்த மகேஸ்வரி
இந்த வாரம் தொடக்கத்திலேயே அசீமை மகேஸ்வரி கண்டப்படி திட்டினார். நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. என்ன ஜர்ஜ்மெண்ட் படிச்சுட்டு வந்திருக்கீங்களா.. என் வேலையை சும்மா எனக்கு சொல்லிகொடுக்காதீங்க.
உங்க வேலையை நீங்கள் கரெட்டா பண்ணா போதும்துன்னு அசிமை திட்டித் தீர்த்தார். இந்த ப்ரொமாவைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆயிட்டாரே.. அசீம் பழைய பார்முலாவுக்கு வாங்க.. என்று கமெண்ட் செய்து வந்தனர்.
அசீமை சீண்டிப் பார்த்த தனலட்சுமி
மகேஸ்வரியைத் தொடர்ந்து அசீம்மை தனலட்சுமி சண்டைக்கு இழுப்பது போல சீண்டி பார்த்து வந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அசீம் ஏன் கோபப்பட்டார்ன்னு இப்போதான் தெரியுது... சும்மா இருக்கும் அசீம்மை ஏன் சீண்டி, சீண்டி பார்க்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
அசீம் - மகேஸ்வரி சண்டையால் பற்றி எரிந்த வீடு
இந்நிலையில், தற்போது இன்றைக்கான பிக்பாஸ் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
அந்த ப்ரொமோவில் மகேஸ்வரிக்கும், அசீம்மைக்கும் பயங்கர சண்டை வெடித்துள்ளது. ஒருவரையொருவர் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் ஷாக்காகி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்த ப்ரொமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அசீம் இப்படி நடந்து கொண்டால்தான் இவங்க கூட இருக்க முடியும்போல என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Azeem - "I got 97% in journalism... Naan pazham thinnu kotta pottavan"
— ArSar (@ArSarTweets) November 4, 2022
Also #Azeem - "Can I read the news, & then go out to do the field interviews? I can do both!"#BiggBossTamil6 #BiggBossTamil https://t.co/Yne9yLWTbv