பிக்பாஸில் கோவப்பட்ட ஜனனி…அய்யோ…இலங்கை தமிழில் நீ கோவபட்டா கூட அழகா இருக்கே - ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

Bigg Boss Janany
By Nandhini Nov 03, 2022 05:28 AM GMT
Report

பிக்பாஸில் கோவப்பட்ட ஜனனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

big-boss-6-vijay-janani-video-viral

கோவப்பட்ட ஜனனி

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் சாப்பிட்ட தட்டை ஒரு சில போட்டியாளர்கள் கழுவி வைக்காமல் இருந்துள்ளனர். இதனால், சக போட்டியாளர்கள் தட்டை யாரும் சரியாக கழுவி வைக்க மாட்றாங்கன்னு ஜனனியிடம் கூறுகின்றனர். உடனே, ஜனனி ஒவ்வொருவரிடம் சென்று தட்டை யார் கழுவி வைக்கவில்லை என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.

எல்லாம் நான் இல்லை.. நான் இல்லை... என்று கூறுகிறார்கள். அப்போது சற்று கோவப்பட்ட ஜனனி... வீட்டில் எல்லாம் சாப்பிட்ட தட்டை கழுவிதானே வைப்பீங்க.. இதெல்லாம் சரி இல்லை என்று இலங்கை தமிழில் சற்று கோவப்படுகிறார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஜனனி.. நீ கோவப்பட்டாகூட அழகாதாம்மா இருக்கு.. இலங்கை தமிழில் என்ன அழகா என் செல்லம் கோவப்படுது பாரு.... என்று ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.