பிக்பாஸ் வீட்டில் இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனனி... - ஷாக்கான மைனா... - வைரலாகும் வீடியோ...!

Bigg Boss Myna Nandhini Janani Gunaseelan
By Nandhini Nov 15, 2022 11:44 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் இளவரசியாக இலங்கைப் பெண் ஜனனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கூச்சல் போட்டு கதறி அழுத ஜனனி

கடந்த வாரம் பிக்பாஸில், விக்ரமும், அமுதவானனும் ஜனனியிடம் ஏதோ வாக்குவாதம் செய்ய, இதனால் மனமுடைந்த ஜனனி கத்தி கூச்சல் போட்டு கதறி அழுதார்.

நான் இங்கே இருக்க மாட்டேன்.. நான் வீட்டிற்கு போகிறேன்.. என்னிடம் யாரும் வாக்குவாதம் செய்யாதீங்க என்று குழந்தைப் போல் அழுதார். இவள் அழுவதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத போட்டியாளர்கள் ஓடி வந்து ஜனனியை கட்டிப்பிடித்து ஜனனியை தேற்றினர்.

ஜனனி அழுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அச்சோ... ஜனனி நீ அழாதம்மா... நீ அழுதா மனம் வலிக்குது... என்று சோகத்தில் கமெண்ட் செய்தனர்.

big-boss-6-vijay-janani-myna-nandhini

பட்டத்து இளவரசியான ஜனனி

இந்நிலையில், இன்றைக்கான பிக்பாஸ் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில், ஜனனி பிக்பாஸ் வீட்டில் டாஸ் ஒன்றில் பட்டத்து இளவரசியாக சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், மைனாவிற்கோ ஒருவரும் ஒரு ஓட்டுக்கூட போடாததால் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ஜனனி ரசிகர்கள் ஜனனி... எங்கள் இதயத்தில் இளவரசி இல்லை... மகாராணி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.