சபாஷ்... தனலட்சுமியை வெளுத்து வாங்கிய கமல்... - வைரலாகும் மாஸ் ப்ரொமோ - ரசிகர்கள் மகிழ்ச்சி

Kamal Haasan Viral Video Bigg Boss
By Nandhini Nov 05, 2022 06:30 PM GMT
Report

இன்றைக்கு வெளியான ப்ரொமோவில், தனலட்சுமியை கமல் வெளுத்து வாங்கியு ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அசீமை திட்டித் தீர்த்த மகேஸ்வரி

இந்த வாரம் தொடக்கத்திலேயே அசீமை மகேஸ்வரி கண்டப்படி திட்டினார். நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. என்ன ஜர்ஜ்மெண்ட் படிச்சுட்டு வந்திருக்கீங்களா.. என் வேலையை சும்மா எனக்கு சொல்லிகொடுக்காதீங்க.

உங்க வேலையை நீங்கள் கரெட்டா பண்ணா போதும்துன்னு அசிமை திட்டித் தீர்த்தார். இந்த ப்ரொமாவைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆயிட்டாரே.. அசீம் பழைய பார்முலாவுக்கு வாங்க.. என்று கமெண்ட் செய்து வந்தனர்.

அசீமை சீண்டிப் பார்த்த தனலட்சுமி

மகேஸ்வரியைத் தொடர்ந்து அசீம்மை தனலட்சுமி சண்டைக்கு இழுப்பது போல சீண்டி பார்த்து வந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அசீம் ஏன் கோபப்பட்டார்ன்னு இப்போதான் தெரியுது... சும்மா இருக்கும் அசீம்மை ஏன் சீண்டி, சீண்டி பார்க்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

big-boss-6-vijay-dhanalaxmi-kamal

தனலட்சுமியை வெளுத்து வாங்கிய கமல்

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் தனலட்சுமியை கமல்ஹாசன் வெளுத்து வாங்கியுள்ளார்.

வீட்டார் உங்ககிட்ட ஒரு கருத்தை சொல்றதுக்கு தயங்குகிறார்கள். ஏன் என்று தெரியுமா.. நான் சொல்லட்டும்மா.. உங்க கோபம் தான். எதுக்கு என்ன பார்த்து கோபம்ன்னு சொல்றீங்க.. இல்லம்மா... நீங்க கோபபட்டதை... நான் அப்படித்தான் கோபப்படுவேன்... இல்லம்மா படக்கூடாதுன்னு சொல்லம்மா.. பட்டுட்டிங்கன்னு சொல்ற... பட்டக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு.. என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சபாஷ்... கமல் சார்... வெளுத்து வாங்கிட்டீங்கன்ன.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.