பிக்பாஸ் வீட்டில் இருக்க அசல் கோளாறுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ வெளியான தகவல்
பிக்பாஸ் வீட்டில் இருக்க அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறிய அசல் கோளாறு -
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொஞ்சம் அத்துமீறி வந்தார். பெண் போட்டியாளர்களான குயின்ஸி, மகேஸ்வரி, மைனா, ஜனனி இவர்களிடம் அசல் செய்த செயல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது. அடுத்தடுத்து இவரின் வீடியோ வெளியானதால், இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமல் சார்... உடனே அசலை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறி கமெண்ட் செய்து வந்தனர்.
நான் என்ன பண்ணேன்...
சென்ற வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் என்று கமல் கேட்ட கேள்விக்கு, அசல், நான் என்ன பண்ணிட்டேனு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு முழிச்சுக்கிட்டு இருக்கேன் சார் என்று கூறிய அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அசல் சம்பளம்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்க அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்க அசலுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ஷ்டசாலி... ஜாலியாக இருக்க பிக்பாஸ் காசு கொடுத்திருக்கரே என்று கிண்டலடித்து வருகின்றனர்.