பண்றதெல்லாம் பண்ணிட்டு கமலிடம் அப்பாவி போல நடித்த அசல் கோளாறு.... - வைரலாகும் ப்ரொமோ
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறிய அசல் -
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொஞ்சம் அத்துமீறி நடந்து வருகிறார். குயின்ஸி, மகேஸ்வரி, மைனா, ஜனனி இவர்களிடம் அசல் செய்த செயல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது. அடுத்தடுத்து இவரின் வீடியோ வெளியானதால், இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமல் சார்... உடனே அசலை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
நான் என்ன பண்ணேன்...
இந்நிலையில், பிக் பாஸ் 6 வீட்டிலிருந்து இன்று இரவு யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த ப்ரொமோ வீடியோவில், கமலிடம் அசல் பேசுகிறார். அதில், நான் என்ன பண்ணிட்டேனு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு முழிச்சுக்கிட்டு இருக்கேன் சார் என்று கூறுகிறார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களோ, நீங்க என்ன பண்ணலனு சொல்லுங்க பார்ப்போம் என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
#Day21 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/GMmZVVIoOL
— Vijay Television (@vijaytelevision) October 30, 2022