இன்டர்நெட்டில் என்னை பற்றிய செய்தியை பார்த்து என் மனம் வலித்தது... - மனம் திறந்த அசல் கோளாறு...!
இன்டர்நெட்டில் என்னை பற்றிய செய்திகளை பார்த்து என் மனம் வலித்தது என்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக அசல் கோளாறு ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறிய அசல் -
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொஞ்சம் அத்துமீறி நடந்து வந்தார். குயின்ஸி, மகேஸ்வரி, மைனா, ஜனனி இவர்களிடம் அசல் செய்த செயல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது. அடுத்தடுத்து இவரின் வீடியோ வெளியானதால், இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமல் சார்... உடனே அசலை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறி கமெண்ட் செய்து வந்தனர்.
நான் என்ன பண்ணேன்...
கடந்த வாரம் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுகிறார் என்று கமல் கேட்க, இதற்கு பதில் அளித்து அசல் பேசுகையில், நான் என்ன பண்ணிட்டேனு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு முழிச்சுக்கிட்டு இருக்கேன் சார் என்று கூறினார். அடுத்த கணமே அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மனம் திறந்த அசல் கோளாறு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ரசிகர்களின் கேள்விக்கு அசல் கோளாறு பதில் அளித்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அசல் , நான் வீட்டில் இருந்து வெளியே வரும்போது எதற்காக வெளியே வருகிறோம் என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு கொண்டேன்.
அதன் பிறகு இன்டர்நெட்டை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது.
இன்டர்நெட்டில் என்னை பற்றிய செய்திகளை பார்த்து நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மிகவும் மனம் உடைந்து போனேன். இண்டர்நெட் என்றால் அப்படிதான் இருக்கும் என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டேன் என்று கூறினார்.