ரக்ஷிதாவை கேவலமாக பின்னால் பேசிய மைனா - வைரலாகும் வீடியோ - விளாசும் நெட்டிசன்கள்...!

Viral Video Bigg Boss Myna Nandhini
By Nandhini 2 மாதங்கள் முன்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நேருக்கு நேராக வெச்சு விளாசிய ரக்ஷிதா

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடந்தது. அப்போது, போட்டியாளர்கள் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு அமர்ந்து நேருக்கு நேராக நாமினேஷன் செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவாறு ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார் ரக்ஷிதா. ராபர்ட் விளையாடும் மன நிலையில் இல்லை என்ற அவர் இந்த வாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற வேண்டும் என்று தடாலடியாக கூறினார். இதைக் கேட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் முகம் வாடிவிட்டது.

ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்ததை பார்த்த ரசிகர்கள்... செம்ம... சூப்பர்மா என அவரை கொண்டாடி வருகிறார்கள்.

big-boss-6-rakshita-myna-nandhini

ரக்ஷிதாவைப் பற்றி பின்னால் பேசிய மைனா

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மைனா ரக்ஷிதாவை பற்றி சக போட்டியாளரான மணியிடம் பின்னால் பேசுகிறார்.

சரவணன்-மீனாட்சி படப்பிடிப்பில் நான் இதைப்போடக்கூடாது. அதை போடக்கூடாது. இது நல்லா இருக்காது.. அது நல்லா இருக்காதுன்னு ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருப்பா... என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் மைனா பேட்டி கொடுக்கும்போது ரக்ஷிதா என்னை நல்லா பாத்துக்குறாங்க.. என்னை மோடிவேஷன் செய்றாங்கன்னு சொல்லிட்டு.. இப்போ.. பின்னால் இப்படி பேசிக்கொண்டிருக்கிறேயே மைனா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.