பிக்பாஸில் ஸ்டைலா நடனமாடி போட்டியாளர்களை அதிர வைத்த கதிர் - வாயடைத்த ரசிகர்கள் - மாஸ் வீடியோ

Kathir Viral Video Bigg Boss
By Nandhini Dec 07, 2022 08:06 AM GMT
Report

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்டிவிட்ஜுவல் பர்ஃபாமன்ஸ் டாஸ்க்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வீக்ளி டாஸ்க்காக இன்டிவிட்ஜுவல் பர்ஃபாமன்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டாஸ்க்கில் பெரிய ஸ்டார்... நீங்க ஆகப் போறீங்க மக்களின் ஸ்டார் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான கெட்டப்பில் கெத்தாய் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை சுற்றி வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். யார் அசத்தலான பர்ஃபாமன்ஸையும் காட்டி வருகிறார்களோ, யார் இந்த டாஸ்க்கின் இறுதியில் அதிக சன்மானம் பெறுகிறார்களோ அவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த போட்டியாளர் வரும் வார கேப்டன் டாஸ்க்கிற்கு நேரடியாக தகுதி பெறுவார்.

big-boss-6-kathir-dance-viral-video

மாஸ் காட்டிய கதிர்

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த டாஸ்க்கில் மைக்கேல் ஜாக்ஸன் கெட்டப்பில் உள்ள கதிர், அவரைப் போலவே நடனமாடி போட்டியாளர்களை அலறவிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஸ்டெப்பிலும் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்திருக்கிறார் கதிர்.

கதிர் ஸ்டைலாக நடனமாடிய இந்த வீடியோ போட்டியாளர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் அதிர வைத்துள்ளது.

தற்போது கதிர் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கதிரின் பர்ஃபாமன்ஸை பார்த்த நெட்டிசன்கள் கதிரா இது என்று வாயை பிளந்து, பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.