அய்யய்யோ... டி20 வரலாற்றில் முதல் முறையாக 15 ரன்களுக்கு ஆல்-அவுட்டான வீரர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில், வரலாற்றில் முதல் முறையாக 15 ரன்களுக்கு ஆல்-அவுட்டான வீரர்களால் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
15 ரன்களுக்கு ஆல்-அவுட்டான வீரர்கள்
இந்தியாவில் எப்படி பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறதோ அதுபோல், ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது.
தற்போது, நடப்பு பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் அணி களத்தில் இறங்கியது. ஆனால், வந்தவுடனே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர். ஆரம்பமே ரொம்ப சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதன்பிறகு வந்த வீரர்களும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.. அடிலெய்டு அணியின் அபார பந்து வீச்சால் சிட்னி வீரர்கள் கிடுகிடுவென அவுட் ஆகி வெளியேறினார்கள்.
மொத்த ரன் என்று பார்த்தால், இறுதியில் 5.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனர். இதனையடுத்து சிட்னியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு அபார வெற்றிபெற்றது.
No words. #BBL12 pic.twitter.com/2Zc2AtGysi
— KFC Big Bash League (@BBL) December 16, 2022